Tuesday, November 9, 2010

போலி மோதலும் கொலையும்



பள்ளி குழந்தைகல் கடத்தி கற்பழித்து மிக கொடுரமான முறையெல் படுகொலை செய்த
கொடூர மோகனை (மோகன் ராஜ்) விசாரிக்க
இன்று காலை 5 .00 மணிக்கு கொன்று சென்ற போது
...இன்ச்பெச்ட்டர் ராய் தாக்கி தப்ப நினைத்த போது போலீஸ் என்கோன்ட்டர் முலம்
சுட்டு கொன்றது. இந்த செயலை போது மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றனர் . இதுதான் இன்று மாலை வர இருக்கும் பத்தரிகை செய்தி .

எல்லாம் என்குன்ட்டர் கொலைகளும் மக்களுகாக நடந்தது இல்லை, அனால் இன்று நடந்த என்குன்ட்டர் மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்று மக்கள் யாரும் எண்ணி மகிழ்ச்சில் திளைகாதீர்கள்.

இவன் ஒருவனை கொன்றதால் இந்த சமூகத்தில் இனி இது போல் வேறு சம்பவம் நடக்காது என்று யாரேனும் ஒருவர் உறுதியாக கூற முடியுமா?

இது
தான் சரியான தீர்ப்பு என்று துள்ளும் நடுத்தர வர்க்கம் (அதாவது காலை 6
மணிக்கு எழுந்து பால் வாங்கி கொடுத்து, எதோ ஒரு சமையல் செய்து
8மணிக்குல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு 10மணிக்குல் அலுவலகம்
சென்று மதியம் 2மணிக்குல் மதிய சாப்பட்டை முடித்து மாலை 6மணிக்குல்
வீட்டுக்குள் சென்று இரவு 10மணிக்குல் படுக்கைக்கு சென்று விடும் எதுவும்
அறிய மற்றும் அறிய விரும்ப வர்க்கம் ) ரொம்ப துல்லாதிங்க நீங்க உட்காரும்
ஷேர் உடைந்து விட போக போகிறது.

இதிலும் கருத்து கூற
ஆரம்பிச்சுடாங்க என்று கணினில் இருந்து உலகை பார்க்கும் கணினி வர்க்கம்
எல்லாரும் கொஞ்சம் நிதானமாக என்னுடைய கருத்தை கொஞ்சம் கேளுங்கள் (அதற்க்கு
முன் ) இந்த மோகன் செய்த கொலையை நான் ஒரு போதும் ஆதற்றிக்க மாட்டேன், அவன்
செய்தது ஒரு கொடுரமான செயல் தான் அதில் எனக்கு எந்த விதமான மாற்று
கருத்துகளும் கிடையாது.

கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் அப்பாவிற்கும் -கார் ஓட்டுனருக்கும் முதலில் அவர்களின் வீடுகளில் வைத்தே சண்டை நிகழ்ந்துள்ளது.
தான்
வண்டி ஒட்டிய பணத்தை (வாடகை) தராமல் இழுத்தடித அவரை பழிவாங்கும்
எண்ணத்துடன் காத்திருந்தான் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி,
குழந்தைகளை கடத்திய பிறகு, என்ன செய்ய வேண்டும் யோசிக்காமல்
கடத்திவிட்டான், போலீஸ் துரத்துகிறது என்ற நியூஸ் அவனை மேலும் பயத்தை
அதிகரித்தது, வேறு வலி இல்லாமல் அந்த குழந்தைககை கொடுரமான முறையில்
கொன்றுவிட்டான் அந்த கொடூரன். அதற்கு பின் பத்திரிகை செய்தி எவ்வளவு தூரம்
அந்த குழந்தைகளை கொடூரமாக கொன்றானோ அதை விட அந்த குழந்தைகளின் கொலைகளின்
மரணத்தை வைத்து வியாபாரம் செய்தனர், அந்த சிறுமியை சரமாரியாக
கற்பழித்தான், தன் இன்ப வெறி தீரும் வரை கற்பழித்தான் என்று மிகவும்
செய்தியை மிக மோசமாக வெளிட்டனர். மக்கள் மனதில் ஒரு கோபம் வெளி பட்டது .
எல்லோரும் அவனை சிக்னல் வைத்து துக்கில் போட வேண்டும் என்றன. விசாரணை
வேண்டாம் அவனை சுட்டு கொள்ளுங்கள் என்றன.

இப்போது போலீஸ் அவனை
சுட்டு கொன்றது. இதன் முலம் ஒரு பத்திரிகை மட்டும் வைத்து இருந்தால்
மக்கள் மனதில் கோபத்தை உண்டாக்க செய்து எவனை வேணும்னாலும் போலீஸ் மூலம்
கொலை செய்ய முடியும் என்பது இப்போது நிரூபணம் ஆகிஉள்ளது.

மோகன்
ஒன்றும் முழு நேர கம வெறியன் கிடையாது. முழு நேர கொலை செய்பவன் கிடையாது.
( அப்படியே இருக்கிண்ட வர்கள் இன்னும் இருக்கிண்டர்கள் அரசியல்
பாதுகாப்பில் ) ஒரு சந்தர்ப்பம் அவனை கொலை செய்ய துண்டியது. அந்த
சந்தர்ப்பம் இந்த சமுதயத்தில் புரையோடி கிடக்கும் மனிதனின் எல்லோருதமும்
இருக்கிறது. ஏற்ற தாழ்வும் இருக்கும் வரை அது தொடரும். அது வரை இப்படி தான்
நடக்கும்.

மோகனை கொன்றது மூலம் எல்லோருக்கும் பயம் வரும் என்று யார்ரும் நினைத்து விடதிரிகள். நீங்கள் செய்யாத குற்ற திற்கும்
இனி என்குன்ட்டர் நடக்கும். எவனும் கேட்க முடியாது ஏன் என்றல் பத்திரிகை உங்களை நார் நாராக செய்திகளின் முலம் கிளிதிரும்.

1997
கோவை கலவரத்தில் மருத்துவமனை முன்பு ஒருவனை மத வெறியர்கள் தீயட்டு
கொளிதினர்ர்கள் அதை போலீஸ் வேடிக்கை பார்த்தது. அப்பொழுது அவர்கள்
துப்பாக்கி என்ன ஆனது.

மதுரையேல் குடும்ப சண்டை காரணமாக முன்று பேர் எரித்து கொண்டார்கள். அப்போது எங்க போனது மக்களின் கோபம்.

இதே மோகன் ஆளும் கட்சில் இருந்திர்ந்தல் இப்படி நடந்திருக்கும ?. அல்லது பெரிய பணக்காரன் நக இருந்திர்ந்தல் நடந்திருக்கும ?

இதை
விட குற்றம் செய்தவர்கள் இன்னும் இருகிறங்கள். அவர்கள் செய்த குற்றம்
எல்லோரும் மறந்து விட்டார்கள் (உதாரணம் கும்பகோணம் தீ விபத்து . அப்போது
தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்தது. இப்ப என்ன ஆச்சு. )

தன் குழந்தைகலை பள்ளிக்கு அழைத்து சென்று விட முடியாத அளவிருக்கு இந்த போட்டி சமுதாயத்தில் போட்டி போடும் அப்பாக்கள்
இப்போது தாங்களே பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுக்கு கொண்டிருகிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியவிள்ளை .

ஒரு மோகன் செத்து விட்டன இன்னும் பல மோகன் இருக்கிறார்கள் எல்லோரை கொன்று விட்டால் இனி நியூஸ் கிடைக்காது. மீண்டும்
புதிய மோகனை இந்த மீடியா உருவாக்கும்.

இந்த போலி ஜனநாயகம் இருக்கும் வரை அது நடக்காது. இவர்களை முதலில் விரட்டியடிப்போம்.

நாம் வீட்டை நாம் ஆளுவதை போல இந்த நாட்டை நாம் ஆளா வேண்டும் .

1 comment:

  1. நன்றி அமன்,
    உங்களின் பதிவு எனக்கு மேலும் விளக்கம் அளித்துள்ளது...
    அந்த பெண் கற்பழிக்கப் படவில்லை..
    ஹேர் பின் கலையாமல் பிணம் கண்டெடுக்கப்பட்டது வாய்க்காலில்...
    இதை ஒரு தொண்டு நிறுவனம் உதவியது..அந்த நிறுவனத்தில் நானும் ஒரு உறுப்பினர்..பத்திரிக்கைகள் சொல்வதை எல்லோரும் அப்படியே நம்பி விடுகிறார்களா என்ன ? இந்த என்கவுண்டர் குழந்தைகளை இழந்தவர்கள் எடுக்க சொன்னதா ? இல்லை...இயல்பாக நடந்ததா ? விசாராணை கண்டிப்பாக இருக்கும்..நடவடிக்கை சரியா ? நடந்தது சரியா ? என்று தீர்ப்பு சொல்ல கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் தப்பித்துக் கொள்வோமாக...

    ReplyDelete